AI காணொளியால் ஏமாந்துபோனேன்: நடிகர் மாதவன்

AFP
பிரபல நடிகர் மாதவன் AI காணொளியை உண்மை என்று நம்பி ஏமாந்து போனதாகக் கூறியுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாதவன் அதைப் பகிர்ந்துகொண்டார்.
பிரபல காற்பந்து விளையாட்டாளரான கிரிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) போன்ற ஓர் ஆடவர் இந்தியக் கிரிக்கெட் வீரரான விராட் கோலியைப் (Virat Kohli) புகழும் காணொளியைப் பார்த்து அதை உண்மை என்று நம்பியதாக அவர் சொன்னார்.
கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துப் பார்ப்பதாகவும் அவர் மிகச் சிறந்த விளையாட்டாளர் என்றும் காணொளியில் ஆடவர் கூறியதாக மாதவன் குறிப்பிட்டார்.
"காணொளியை உண்மை என்று நம்பி எனது Instagram பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்தேன்," என்று கூறினார்.
பின்னர் விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா அனுப்பிய குறுந்தகவல் கண்டதும் அது AI காணொளியென்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
சம்பவம் தமக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர் சொன்னார்.
"இதுபோன்ற காணொளிகளைப் பகிரும் முன்னர் அவை உண்மையானவையா
என்று சரி பார்ப்பது மிகவும் அவசியம்," என்று வலியுறுத்தினார் நடிகர் மாதவன்.