Skip to main content
முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீரின் பேத்தி வீட்டில் திருட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீரின் பேத்தி வீட்டில் திருட்டு

வாசிப்புநேரம் -
முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீரின் பேத்தி வீட்டில் திருட்டு

(படம்: AFP/Mohd Rasfan)

மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகம்மது (Mahathir Mohamed) பேத்தி வீட்டில் நடந்த திருட்டை ஒட்டி காவல்துறையினர் மூவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரிங்கிட் திருடுபோனதாகக் கூறப்படுகிறது.

கோலாலம்பூர் தற்காலிகக் காவல்துறைத் தலைவர் முகம்மது யூசுஃப் ஜான் முகம்மது (Mohamed Usuf Jan Mohamad) திருட்டு தொடர்பாக விசாரிக்கப்படும் மூவரில் இருவர் வீட்டில் வேலை பார்த்தவர்கள் என்று சொன்னார்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய நகைகள் திருட்டுப் போனதாகத் தெரிகிறது.

வீட்டில் திருட்டு நடந்ததை முதலில் வீட்டுப் பணிப்பெண் கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

வீட்டின் பின்பக்கக் கதவு பலவந்தமாகத் திறக்கப்பட்டிருந்தது. அறையில் உள்ள பொருள்கள் சிதறிக்கிடந்தன.
ஆதாரம் : Others/The Star

மேலும் செய்திகள் கட்டுரைகள்