Skip to main content
முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீருக்குப் பயிற்சி வழி சிகிச்சை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீருக்குப் பயிற்சி வழி சிகிச்சை

வாசிப்புநேரம் -
முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீருக்குப் பயிற்சி வழி சிகிச்சை
படம்: Reuters
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 10 Jan 2026 07:59PM புதுப்பிப்பு : 10 Jan 2026 09:45PM

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது பயிற்சி வழிச் சிகிச்சை (physiotherapy) மேற்கொள்ளவிருக்கிறார்.

அவருக்குச் சென்ற செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் எந்த அறுவைச் சிகிச்சையும் செய்துகொள்ளப்போவதில்லை என்று டாக்டர் மகாதீரின் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது அவர் மலேசியாவின் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிலையத்தில் இருக்கிறார்.

அவரது வயதைக் கருதி மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவில்லை.

டாக்டர் மகாதீருக்கு வயது 100.

அவர் மருத்துவமனையில் இரண்டிலிருந்து மூன்று வாரம்வரை சிகிச்சை பெறுவார் என்று அவருடைய மகன் முக்ரிஸ் (Mukhriz) முன்னதாகக் கூறியிருந்தார்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்