ஜக்கர்த்தாவில் பெருந்தீ - 7 மணிநேரம் போராடிய வீரர்கள்
வாசிப்புநேரம் -
(படம்: Adietiya Haswi/via REUTERS)
இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட பெரிய தீச்சம்பவத்தினால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
அதிகமானோர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
மூவர் காயமடைந்ததாக உள்ளூர்த் தகவல்கள் தெரிவித்தன.
கெமாயோரான் (Kemayoran) குடியிருப்பு வட்டாரத்தில் பற்றிய தீயை அணைக்க 30க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களில் 175 தீயணைப்பாளர்கள் அனுப்பப்பட்டனர்.
சுமார் ஏழு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இன்று அதிகாலை நெருப்பை அணைத்ததாக ஜக்கர்த்தா மாநிலத் தீ, மீட்புப் பிரிவு தெரிவித்தது.
சுமார் 250 வீடுகள் தீக்கிரையாகின. கிட்டத்தட்ட 330 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
வீடுகளைவிட்டு வெளியேறியவர்களுக்காகத் தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
உள்ளூர் அமைப்புகள் நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கின்றன.
தீச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.
சேதத்தை மதிப்பிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம் : Others