மலேசியாவில் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அரசாங்க ஊழியர்கள்
This audio is generated by an AI tool.
மலேசியாவில் அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறை இன்று நடப்புக்கு வருகிறது.
கிட்டத்தட்ட 200,000 பேர் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அதற்கான ஒப்புதலைத் தனிப்பட்ட துறைகளின் தலைவர்கள் வழங்கவேண்டும்.
வேலையின் தேவை, அதன் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.
அமைச்சுகள், ஆணைபெற்ற கழகங்கள், அரசாங்க அமைப்புகள் போன்ற குறிப்பிட்ட சில துறைகளின் ஊழியர்கள், மூன்று நாள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு மலேசிய அரசாங்கம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
அனைத்து மாநிலத் தலைநகரங்கள், கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜெயா ஆகியவற்றில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நடைமுறை பொருந்தும்.
குறிப்பாக அலுவலகத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் வாழும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, அரசாங்கச் செலவுகளைக் குறைப்பது அதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.