சீனாவிலிருந்து சுற்றுப்பயணிகளை ஈர்க்க முனைப்புடன் செயல்படும் மலேசியா
மலேசியா இவ்வாண்டு (2025) இளம் சுற்றுப்பயணிகளை ஈர்க்க முனைப்புடன் செயல்படுகிறது.
அது குறிப்பாகச் சீனாவிலிருந்து சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
கடந்த ஆண்டு (2024) சுமார் 4 மில்லியன் சீனச் சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்குச் சென்றனர்.
ஆனால் 5 மில்லியன் பேரை வரவேற்பது அதன் இலக்காகயிருந்தது.
அதற்கு முந்தைய ஆண்டு (2023) அந்த எண்ணிக்கை 1.4 மில்லியனாகயிருந்தது.
இரு நாடுகளுக்குமிடையில் அதிகரித்துள்ள விமானச் சேவைகளும், விசாயின்றி (visa) 30 நாளுக்குப் பயணம் செய்யும் அனுமதியும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கூடியதற்கு முக்கியக் காரணங்களாகும்.
புதிய கலாசார அனுபவங்களை நாடும் இளம் சுற்றுப்பயணிகளை மலேசியாவிற்கு ஈர்க்க, சுற்றுப்பயணத் துறையினர் மின்னிலக்க முறைகளையும் செயற்கை நுண்ணறிவையும் கையாள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மலேசியாவின் சுற்றுப்பயணத் துறையில் சுமார் 4 மில்லியன் ஊழியர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15 விழுக்காடு சுற்றுப்பயணத் துறையிலிருந்து கிடைக்கிறது.