Skip to main content
மின்கழிவு இறக்குமதிக்கு மலேசியா தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மின்கழிவு இறக்குமதிக்கு மலேசியா தடை

வாசிப்புநேரம் -
மின்கழிவு இறக்குமதிக்கு மலேசியா தடை
(கோப்புப் படம்: REUTERS/Hasnoor Hussain)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியா மின்கழிவு இறக்குமதிக்கு முழுத் தடைவிதித்துள்ளது.

நாட்டுக்குள் ஆபத்தான, சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்கும் பொருள்கள் வருவதைக் கட்டுப்படுத்த அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளும் மற்ற கழிவுகளும் அதிகம் வந்துசேரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று.

பெரும்பாலான பொருள்கள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படுகின்றன. அவற்றுள் பெரும்பகுதி மறுபயனீட்டுக்கு உகந்தவையாக இருப்பதில்லை.

புதிய தடையை நடைமுறைப்படுத்த எல்லா அமைப்புகளும் ஒத்துழைக்கவேண்டும் என்று ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் கேட்டுக்கொண்டார்.

பிளாஸ்டிக் கழிவுகளின் இறக்குமதிக்கு 3 மாதத் தடை விதிப்பது குறித்தும் மலேசியா ஆராய்கிறது.

சுற்றுப்புறத் துறையைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகள் சட்டவிரோத மின்கழிவுகள் தொடர்பில் லஞ்சம் பெற்றதாகச் சென்ற வாரம் தகவல் வெளியானது.

சுற்றுப்புறத் துறையின் இயக்குநரும் இரு அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்