Skip to main content
புறப்பட்டது வெள்ளிரதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் exclusive

புறப்பட்டது வெள்ளிரதம் - தொடங்கியது பத்துமலை தைப்பூசம்!

வாசிப்புநேரம் -
புறப்பட்டது வெள்ளிரதம் -  தொடங்கியது பத்துமலை தைப்பூசம்!

(படங்கள்: லொவிஷீனா)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பத்துமலை தைப்பூச வெள்ளிரத ஊர்வலம் தொடங்கி விட்டது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி ரதம் இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டது.

 
Related article image
வெள்ளிரதம் அசைந்தாடிச் செல்வதைத் தரிசிக்கவும் கண்டு ரசிக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

சில பக்தர்கள் பால் குடம் ஏந்தியவாறு ரதத்தின் பின்னால் செல்கின்றனர்.

 
Related article image
ஆங்காங்கே அன்னதான, தண்ணீர் பந்தல்களையும் காண முடிகிறது.

சில பந்தல்களில் பாரம்பரிய நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமிருக்கிறது.
 
Related article image
வெள்ளிரதம் 15 கிலோமீட்டர் வீதி உலாவுக்குப் பிறகு நாளை பிற்பகல் 3 மணிக்குப் பத்துமலை திருத்தலத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டு பத்துமலை தைப்பூசம் அதிகாரபூர்வமாகத் தொடங்கும்.

 
Related article image
ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே வெள்ளிரதம் கோலாலம்பூரிலிருந்து பத்துமலையை நோக்கிப் புறப்பட்டுவிடும்.
 
Related article image
முதல் வெள்ளி ரத ஊர்வலம் 1983ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் தொடங்கியது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்