மலேசியப் பேருந்து விபத்து - 15 பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்

Info.semasa/Facebook
மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 15 பேர் மாண்டனர்.
பேராக் மாநிலத்தில் இருக்கும் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பேருந்தில் இருந்ததாக ஸ்டார் நாளிதழ் சொன்னது.
விபத்து இன்று காலை நடந்தது.
பேராக் மாநிலத்தையும் கிளந்தான் மாநிலத்தையும் இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
பேருந்து இன்னொரு வாகனத்துடன் மோதியதாக நம்பப்படுகிறது.
விபத்தில் மொத்தம் 48 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
பேருந்தில் 42 மாணவர்களுடன் ஓட்டுநரும் இன்னொருவரும் இருந்தனர்.
விபத்தில் சிக்கிய மற்றொரு வாகனத்தில் 4 பேர் இருந்ததாக ஸ்டார் கூறியது.
சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர், பேருந்து ஒரு பக்கம் சாய்ந்து கிடந்ததைக் கண்டனர்.
மாணவர்கள் சிலர் பேருந்தைவிட்டுச் சுயமாக வெளியேறினர்.
பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்ட அதிகாரிகள் காயமுற்றோரை மருத்துவமனையில் சேர்த்தனர்.