Skip to main content
புத்தாண்டு நிகழ்ச்சிக்குச் சென்ற 4 பேர் திடீர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புத்தாண்டு நிகழ்ச்சிக்குச் சென்ற 4 பேர் திடீர் மரணம் - அதிகாரிகள் விசாரணை

வாசிப்புநேரம் -

மலேசியாவில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குச் சென்ற நால்வர் ஒருவருக்குப்  பின் ஒருவராக மாண்டனர்.

அவர்களின் மரணங்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆராய்வதாக China Press எனும் மலேசிய ஊடகம் கூறியுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் Sunway Lagoon கேளிக்கைப் பூங்காவில் Pinkfish Festival என்ற கொண்டாட்ட  நிகழ்ச்சி நடந்தது.

அதில் கலந்துகொண்ட 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நால்வரும் நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் திடீரென்று மாண்டனர்.

பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களின் உடல்களில் காயம் ஏதும் இல்லை என்று தெரியவந்ததாக China Press கூறியது.

அவர்கள் நச்சு உட்கொண்டார்களா என்பது தற்போது விசாரிக்கப்படுகிறது.

ஆதாரம் : Others/China Press

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்