மலேசியாவில் வலம்வரும் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
வாசிப்புநேரம் -
(படம்: AFP)
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள் வலம்வருவதாக அந்நாட்டின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
வெறும் 2 ரிங்கிட் விலையில் அந்தப் போலி 100 ரிங்கிட் நோட்டுகள் இணைய விற்பனைத் தளங்களில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உண்மையான நோட்டுகளில் உள்ள அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் போலி நோட்டுகளிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அது ஒரு கலைப்படைப்பு, பார்ப்பதற்கு உண்மை போல் தோன்றுகிறது என்று வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.
போலி நோட்டுகள் எங்கே அச்சடிக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை என்று மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

ஆதாரம் : Others