Skip to main content
மலேசியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி

வாசிப்புநேரம் -
மலேசியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி

AFP / Mohd Rasfan

மலேசியப் பொருளாதாரம் கடந்த மூவாண்டில் இல்லாத வகையில் சென்ற ஆண்டு வேகமாய் வளர்ச்சி கண்டுள்ளது.

அதிகரித்த உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதி, முதலீடு ஆகியன அந்த உயர்வுக்குக் காரணமாயின.

இந்த ஆண்டும் அந்த வளர்ச்சி தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியப் பொருளாதாரம் 2025இல் 5.2 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில்  உள்நாட்டு உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 6.3 விழுக்காடு விரிவடைந்தது.

சேவை, உற்பத்தி முதலிய துறைகளில் ஏற்பட்ட ஏற்றம் அதற்குக் காரணமானது.

12 காலாண்டுகளில் பதிவான ஆக வேகமான வளர்ச்சி அது.

அமெரிக்கா சென்ற ஆண்டு மலேசிய ஏற்றுமதிகள்மீது 19 விழுக்காடு வரி விதித்தது.

எனினும் வலுவான உள்நாட்டுத் தேவைகள், தொடர்ந்து செய்யப்படும் முதலீடுகள், நிலையான ஏற்றுமதி முதலியன அவற்றைச் சமாளிக்க உதவியதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் இவ்வாண்டு மலேசியப் பொருளாதாரம் சுமார் 4.5 விழுக்காடு வளர்ச்சியடையலாம் எனச் சொல்லப்பட்டது.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்