ஜொகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் - QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறை விரிவாக்கம்
வாசிப்புநேரம் -
CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜொகூர் நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்துசெல்லும் சிங்கப்பூரர்கள் அல்லது வெளிநாட்டினர் QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறை விரிவுபடுத்தப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் இனி மோட்டார்சைக்கிளோட்டிகளும் பாதசாரிகளும் நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லலாம்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட குடிநுழைவு முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டச் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது.
காரில் மலேசியாவுக்குச் செல்லும் வெளிநாட்டினர் ஜொகூர் பாலத்திலும் துவாஸ் இரண்டாம் இணைப்பிலும் அந்த முறையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இனி மோட்டார்சைக்கிளோட்டிகளும் பாதசாரிகளும் MyNIISe செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் QR குறியீட்டைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் செல்ல முடியும்.
முன்னோடித் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிவரை தொடரும்.

ஆதாரம் : CNA