Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியப் பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப்

வாசிப்புநேரம் -
 மலேசியப் பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப்

கோப்புப் படம்: AFP/Saul Loeb

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) சில நாடுகள்மீது முன்னதாக அறிவித்திருந்த தீர்வைகளில் மாற்றம் செய்யும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

மலேசியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்மீதான தீர்வை 25 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மியன்மார், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கான தீர்வை 40 விழுக்காடாக நீடிக்கும்.

இரு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டவில்லை.

தாய்லந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கான தீர்வை 36 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிபந்தனையற்ற உடனடிச் சண்டைநிறுத்ததிற்கு இரு நாடுகளும் சம்மதித்ததால் தீர்வை குறைக்கப்பட்டது.

பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தீர்வை முந்தைய ஒப்பந்தத்தின்படி 19 விழுக்காடாகத் தொடர்கிறது.

சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்மீதான தீர்வை 10 விழுக்காடாக நீடிக்கிறது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்