Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"ரொஹிஞ்சா அகதிகளின் உயிருக்கு ஆபத்து என்றால் திருப்பியனுப்ப மாட்டோம்"

வாசிப்புநேரம் -
"ரொஹிஞ்சா அகதிகளின் உயிருக்கு ஆபத்து என்றால் திருப்பியனுப்ப மாட்டோம்"

படம்: Reuters/Hasnoor Hussain

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ரொஹிஞ்சா அகதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்தால் அவர்களைச் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்ப மாட்டோம் என்று மலேசியா உறுதியளித்துள்ளது.

கடந்த வாரம் 5,000 ரொஹிஞ்சா மக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) அறிவித்தார்.

ரொஹிஞ்சா மக்களுக்கும் மலேசிய உள்ளூர்ச் சமூகத்தினருக்கும் இடையே பதற்றம் நிலவும் சூழலில் அந்த அறிவிப்பு வெளியாகியது.

மியன்மாரில் சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாக மலேசிய மனித உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்தன.

2017ஆம் ஆண்டு மியன்மார் ராணுவத்தின் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து ரொஹிஞ்சாக்கள் பலர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச்சென்றனர்.

மலேசியாவில் 126 ஆயிரத்துக்கும் அதிகமான ரொஹிஞ்சா அகதிகள் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களை மியன்மாருக்குத் திருப்பியனுப்புவதற்குமுன் அதற்கான சோதனை நடவடிக்கை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்