ஈரான் போர் நிறுத்தம் - வரவேற்ற மலேசியா, இந்தோனேசியா
படம்: AFP
This audio is generated by an AI tool.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) ஈரானில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார்.
மத்திய கிழக்கில் நீடித்த அமைதி நிலவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி உடன்பாடு நல்ல முறையில் மேற்கொள்ளப்படும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
பேச்சுவார்த்தை நியாயமாக நடந்தால் மட்டுமே அதில் வெற்றிகாண முடியும்; ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டம் வட்டார நாடுகளான ஈராக், லெபனான், ஏமன் ஆகியவற்றுக்கும் தெளிவாக விரிவாக்கப்பட வேண்டும் என்று திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இவோன் மெவெங்காங் (Yvonne Mewengkang), ஈரான் சண்டை நிறுத்தத்தை ஜக்கர்த்தா வரவேற்பதாகத் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் அரசுரிமை, அரசதந்திரம், பிரதேச உரிமை ஆகியவற்றை எல்லாத் தரப்புகளும் மதித்து நடக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.