Skip to main content
ஜொகூர் தேர்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூர் தேர்தல் - மத்திய அரசாங்கத்தின் கவனம் சிதறாது: மலேசியப் பிரதமர் அன்வார்

வாசிப்புநேரம் -
ஜொகூர் தேர்தல் - மத்திய அரசாங்கத்தின் கவனம் சிதறாது: மலேசியப் பிரதமர் அன்வார்

படம்: Rolex Dela Pena/Reuters

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim), எதிர்வரும் ஜொகூர் மாநிலத் தேர்தல் காரணமாக மத்திய அரசாங்கம் அதன் கடமைகளில் இருந்து கவனத்தைச் சிதறவிடாது என்று கூறியிருக்கிறார்.

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம் திங்கட்கிழமை கலைக்கப்பட்டது.

60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தாம் திடீர்ப் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கலாம் என்ற ஊகத்தைத் திரு அன்வார் நிராகரித்தார்.

மலேசியாவில் பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டிற்குள் நடத்தப்படவேண்டும்.

ஆனால் அடுத்த ஓராண்டிற்குள் மூன்று மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றாக வேண்டும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்