Skip to main content
ஜொகூர் தேர்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூர் தேர்தல் - வேட்புமனுத் தாக்கல் நிறைவு

வாசிப்புநேரம் -
ஜொகூர் தேர்தல் - வேட்புமனுத் தாக்கல் நிறைவு

படம்: கீர்த்திகா பெருமாள்

வெளியீடு : 27 Jun 2026 10:00AM புதுப்பிப்பு : 27 Jun 2026 01:18PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.

காலை 9 மணி வாக்கில் உத்தேச வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கினர்

ஜொகூர் மாநிலம் முழுவதும் 56 வேட்புமனு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புக்கிட் பத்து தொகுதிக்கான வேட்புமனு நிலையத்திலிருந்து 'செய்தி' நிருபர் கீர்த்திகா பெருமாள் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் முறையாக அறிவிக்கப்படும் என்றார் அவர்.

அப்படி அனைவரின் ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்தத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவும்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, தேசிய முன்னணிக் கூட்டணி, MUDA கட்சி, Bersama கட்சி, சுயேச்சை வேட்பாளர் ஆகிய தரப்புகளுக்கு இடையே போட்டி நிலவக்கூடும்.

சுயேச்சை வேட்பாளர் இதற்கு முன் புக்கிட் பர்மாய் (Bukit Purmai) தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சென்ற பொதுத் தேர்தலில் வெறும் 137 வாக்கு வித்தியாசத்தில் புக்கிட் பத்து தொகுதி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசம் சென்றது.

அதனாலேயே அணுக்கமாகக் கவனிக்கப்படும் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுவதை எதிர்பார்த்து ஆதரவாளர்கள் நிலையத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Related article image
படம்: கீர்த்திகா பெருமாள்
Related article image
படம்: கீர்த்திகா பெருமாள்
Related article image
படம்: கீர்த்திகா பெருமாள்
Related article image
படம்: கீர்த்திகா பெருமாள்
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்