Skip to main content
மலேசிய அதிர்ஷ்டக் குலுக்கில் $22.3 மில்லியன் வென்ற ஆடவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசிய அதிர்ஷ்டக் குலுக்கில் $22.3 மில்லியன் வென்ற ஆடவர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவில் ஓர் ஆடவர் அதிர்ஷ்டக் குலுக்கில் 73.1 மில்லியன் ரிங்கிட் (சுமார் 22.3 மில்லியன் வெள்ளி) வென்றிருக்கிறார்.

சிங்கப்பூரில் பணியாற்றும் அவருக்கு வயது 53.

அவர் தம் குடும்பத்தினர் பிறந்த தேதிகளை மனத்தில்கொண்டு 3,6,9,12,27,34 ஆகிய எண்களைத் தேர்வு செய்தார்.

'Supreme Toto 6/58' என்ற குலுக்கில் அனைத்து எண்களும் வெற்றி பெற்றன.

ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆடவர் இரவெல்லாம் தூங்கவே முடியவில்லை என்று சொன்னதாக The Star குறிப்பிட்டது.

வீட்டுக் கடனை அடைத்துவிட்டு மீதமுள்ள பணத்தைப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்கவிருப்பதாக அவர் கூறினார்.

அதிர்ஷ்டக் குலுக்கின் மொத்தப் பரிசுத்தொகை 78.5 மில்லியன் ரிங்கிட் (சுமார் 23.9 மில்லியன் வெள்ளி).

மீதமிருந்த பரிசுத்தொகையை வென்ற இருவரும் தங்கள் குடும்பத்தினர் சார்ந்த எண்களைத் தேர்ந்தெடுத்தது தற்செயலான ஒற்றுமை.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்