சீனாவில் மலேசியச் சுற்றுப்பயணிகள் சர்ச்சை - காவல்துறை விசாரணை
படம்: TikTok/@ekyn.wong
This audio is generated by an AI tool.
சீனாவில் தவறாக நடந்துகொண்ட மலேசியச் சுற்றுப்பயணிகளில் ஒருவர் மலேசியக் காவல்துறையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
அவர் மீது விசாரணை நடத்துவதாகக் காவல்துறை அதிகாரி காலிட் இஸ்மாயில் (Khalid Ismail) கூறியுள்ளார்.
சீனாவில் மலேசியச் சுற்றுப்பயணிகள் மூக்கை மூடிக்கொண்டு துர்நாற்றமாக இருப்பதாகக் கூறும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.
காவல்துறை விசாரணை நடத்தும் என்றும் சட்டம் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
காவல்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அனைத்து நேரங்களிலும் முறையாக நடந்துகொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
விசாரணை செய்யப்படும் நபரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மலேசியாவின் சமூக ஊடகப் பிரபலம் நூர் அஷிகின் முகமது டலீல் (Nur Asyiqin Mohd Dalil) அந்தக் காணொளியைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அவர் காவல்துறையைச் சேர்ந்தவரா என்பது தெரியவில்லை.
அவரது காணொளி உள்ளூர் மக்களை அவமதித்ததாகப் பலரும் குறைகூறினர்.
சீனாவிலும் அந்தக் காணொளி பலரைக் கோபமடையச் செய்தது.
காணொளியை நீக்கிவிட்டு அஷிகின் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.