உலகம் செய்தியில் மட்டும்
மலேசியாவில் அடுத்தடுத்து 2 அமைச்சர்கள் பதவி விலகல் - "ஆளுங்கட்சி அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது"
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Zamzahuri Abas)
மலேசிய அமைச்சரவையைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் ஒரே நாளில் பதவி விலகியிருப்பது பல அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.
அவர்களில் ஒருவர் ரஃபிஸி ரம்லி (Rafizi Ramli). பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.
அவரை அடுத்து இயற்கை வள, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் நிக் நஸ்மி நிக் அகமது (Nik Nazmi Nik Ahmad).
கெஅடிலான் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர், உதவித் தலைவர் பதவிக்கு முறையே இருவரும் போட்டியிட்டனர். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.
பதவி விலகல் தனிப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனாலும் அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் மலேசியாவைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல் கவனிப்பாளருமான ரேவதி.
"திட்டங்களும் கொள்கைகளும் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய மற்றோர் அமைச்சரை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால் புதியவரைக் கொண்டுவருவதா இருப்பவரையே நியமிப்பதா என்பதை முடிவு செய்யவேண்டும்," என்றார் அவர்.
கூட்டணி அரசாங்கம் என்பதால் மற்ற கட்சிகளும் பொறுப்புக்கு ஆசைப்பட வாய்ப்பிருக்கிறது.
"திரு ரஃபிஸி விட்டுச்செல்வது பொருளாதார அமைச்சர் பதவி...நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு பொறுப்பு என்பதால் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதில்தான் அனைவரது கவனமும் திரும்பியிருக்கும்," என்றார் அவர்.
திரு அன்வாருக்கு மற்றொரு மிகப் பெரிய பொறுப்பும் இருப்பதாக ரேவதி கூறுகிறார்.
"ஆளுங்கட்சி அமைச்சர்களின் பதவி விலகலைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது மக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனைச் சரிசெய்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற திரு அன்வார் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்," என்றார் அவர்.
பொருளாதார அமைச்சர் என்ற முறையில் திரு ரஃபிஸி நிறைவேற்ற வேண்டிய 13ஆவது மலேசியத் திட்டத்தின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகலாம் என்றார் ரேவதி.
தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட இத்திட்டம் ஆசியாவில் மலேசியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கிய நோக்கங்களைக் கொண்டிருப்பதை அவர் சுட்டினார்.

ஆதாரம் : Mediacorp Seithi