மலேசியாவின் வேலையின்மை விகிதம் 2.9% - 11 ஆண்டுகளில் ஆகக்குறைவு
This audio is generated by an AI tool.
மலேசியாவின் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காட்டாகப் பதிவாகியிருக்கிறது.
சென்ற நவம்பரில் நடத்தப்பட்ட ஆய்வில் அது தெரியவந்தது.
கடைசியாக 2014ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 3 விழுக்காட்டிற்குக் குறைவாக இருந்தது.
வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 17.06 மில்லியனிலிருந்து 17.09 மில்லியனுக்கு உயர்ந்ததாக அந்நாட்டின் தலைமைப் புள்ளிவிவர நிபுணர் முகமது உஸிர் மஹிதின் தெரிவித்தார்.
பொருளாதாரம் வலுவடைவதால் வேலையின்மை விகிதம் குறைந்திருப்பதாக அவர் விளக்கினார்.
வேலையில்லாதோரில் 79.8 விழுக்காட்டினர் மும்முரமாக வேலை தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேலைச்சந்தை வரும் மாதங்களில் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்று திரு உஸிர் தெரிவித்தார்.
குறிப்பாகச் சுகாதாரம், சமூகச் சேவை, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, விருந்தோம்பல், உணவு ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உயர்ந்தன.