Skip to main content
கோலாலம்பூரில் $16.8 மில்லியன் AI சில்லு கடத்தல் முறியடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கோலாலம்பூரில் $16.8 மில்லியன் AI சில்லு கடத்தல் முறியடிப்பு

வாசிப்புநேரம் -
கோலாலம்பூரில் $16.8 மில்லியன் AI சில்லு கடத்தல் முறியடிப்பு

படம்: Mohd Rasfan / AFP

வெளியீடு : 27 Jun 2026 10:43AM புதுப்பிப்பு : 27 Jun 2026 12:55PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியச் சுங்கத்துறை 13 மில்லியன் டாலர் (16.8 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) செயற்கை நுண்ணறிவு நுண்சில்லு (AI chips) கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விமான நிலையத்தின் தடையில்லா வரத்தகப் பகுதியில் இம்மாதம் 5ஆம் தேதி அதிகாரிகள் சோதனையை நடத்தினர்.

அங்கிருந்து மற்றோர் ஆசிய நாட்டுக்கு அந்தப் பொருள்கள் அனுப்பப்படவிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நுண்சில்லுகள் எங்குத் தயாரிக்கப்பட்டன, எங்குச் செல்லவிருந்தன போன்ற விவரங்களை மலேசிய அதிகாரிகள் வழங்க மறுத்துவிட்டனர்.

அந்த ஏற்றுமதியில் சம்பந்தப்பட்ட மலேசிய நிறுவனம் ஒன்று விசாரணையில் உதவுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சில்லுகளின் ஏற்றுமதி, மறுஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மலேசியா கடுமையாக்கியது.

அதற்காக Strategic Trade Permit (சிறப்பு வர்த்தக அனுமதி) பெறுவது கட்டாயம்.

சில்லுகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற சந்தேகம் இருந்தால் நிறுவனங்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்