மறுநாள் விற்பதற்காக சமைத்த உணவைக் கழுவி வைத்த உணவகம் - மூட உத்தரவு!
வாசிப்புநேரம் -
மலேசியாவின் சிரம்பான் (Seremban) நகரில் சுகாதார அதிகாரிகள் உணவகம் ஒன்றை 2 வாரங்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளனர்.
அந்த உணவகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மறுநாள் விற்பதற்காக சமைத்த உணவைக் கழுவுவது காணொளியில் பதிவானது.
அந்தக் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.
நேற்று முன்தினம் (3 பிப்ரவரி) அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் அந்த ஊழியர் சமைத்த உணவைக் கழுவித் தட்டுகளில் வைப்பது தெரிந்தது.
அதனை உணவகத்தின் பின்னால் நடந்து சென்ற ஒருவர் நள்ளிரவு வாக்கில் பார்த்தார்.
பிறகு அதைக் காணொளியாக எடுத்த அவர் ஊழியரிடம் ஏன் உணவு வெவ்வேறு தட்டுகளில் வைக்கப்படுகிறது எனக் கேட்டார்.
அது மீண்டும் சமைக்கப்பட்டு மறுநாள் விற்கப்படும் என்று அந்த ஊழியர் பதில் கூறியிருக்கிறார்.
அதைத் தட்டிக்கேட்ட போது கடையின் ஊழியர்கள் காரணங்கள் சொன்னதாக அந்த வழிப்போக்கர் கூறினார்.
பிறகு அது போன்று வழக்கமாகச் செய்வதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உணவகத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
The Rakyat Post எனும் நாளேடு 750 ரிங்கிட் (242 சிங்கப்பூர் வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறியது.

ஆதாரம் : CNA