இரு ரைஃபிள்; பலநூறு தோட்டா - தாய்லந்து எல்லையில் பிடிபட்ட மலேசியர்
வாசிப்புநேரம் -
(படம்: Sadao police)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தாய்லந்து எல்லையில் இரு ரைஃபிள் (rifle) தூப்பாக்கிகளையும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களையும் வைத்திருந்த மலேசிய ஆடவர் பிடிபட்டிருக்கிறார்.
அவர் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் காவல்துறை சந்தேகப்பட்டது.
அவர் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் கெடா மாநிலத்தை நோக்கி பயணம் செய்தார்.
ஓட்டுநர் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்துகொண்டதால் அதிகாரிகள் காரை நிறுத்தச் சொல்லி சோதனை மேற்கொண்டனர்.
சந்தேக நபருக்கு வயது 45. காவல்துறை அவரை விசாரிக்கிறது.
தாய்லந்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஆயுதங்கள் நிறைந்த பையைக் கொடுத்ததாக அவர் விசாரணையில் சொன்னார்.
காவல்துறை அதிகாரிகள் எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவார்கள் என்று Berita Harian பத்திரிகை சொன்னது.

ஆதாரம் : CNA