உலகம் trending
மாணவிக்குக் காதல் குறுஞ்செய்திகளா? - குடும்பமும் புகார் பள்ளி முதல்வரும் புகார்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
மலேசியாவில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி முதல்வர், தனியே காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பேராக் மாநிலத்தின் பகான் டத்தோ (Bagan Datuk) பகுதியில் உள்ள பள்ளியின் 56 வயது முதல்வர் மாணவியின் குடும்பத்தினர் தம்மைத் தாக்கியதாகக் கூறியுள்ளார்.
அவர்கள் தம்மிடம் விளக்கம் கேட்கும் காணொளி இணையத்தில் பரவியதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
உயர்நிலை மூன்றில் பயிலும் மாணவிக்கு முதல்வர் காதல் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தொலைபேசியில் அன்பை வெளிப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாணவியின் தாயாரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக முதல்வர் உட்பட ஒன்பது பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெறுகிறது.
விசாரணை முடியும் வரை முதல்வர் தற்காலிகமாக மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.