1MDB ஊழல்: பதுக்கப்பட்ட ஓவியங்களை மீட்ட மலேசிய அரசாங்கம்
கோப்புப்படம்: Reuters/Stringer
மலேசியாவில் 1MDB ஊழல் பணத்தில் வாங்கப்பட்ட பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கலைப்படைப்புகள் மீட்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதியளித்துள்ளது.
அண்மையில் 4 முக்கிய ஓவியங்கள் மீட்கப்பட்டன.
அவற்றைச் சரியான வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்க மலேசிய தேசியக் கலைக்கூடம் உதவி வருகிறது.
மீட்கப்பட்ட ஓவியங்கள்:
1. பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) 'L'Ecuyère et les clowns' (1961)
2. ஜோன் மிரோவின் (Joan Miró) 'Composition' (1953)
3. மோரிஸ் உட்ரிலோவின் (Maurice Utrillo) 'Maison de Rendez-vous de chasse de Henri IV, Rue St. Vincent, Montmartre' (1934)
4. பால்தஸின் 'Étude pour femme couchée' (1948).
இவை வெறும் வணிக மதிப்புள்ளவை மட்டுமல்ல; நாட்டின் மிகப்பெரிய ஊழலில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் என ஆணையம் சொன்னது.
அவற்றின் மதிப்பு சுமார் 250,000 வெள்ளி.
இவை மலேசிய தேசியக் கலைக்கூடத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஏலத்தில் விடப்படலாம்.
நிதியமைச்சு இறுதி முடிவெடுக்கும்.