வாக்குமூலம் கொடுத்தார் மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி
வாசிப்புநேரம் -
AFP
மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று காலை அந்நாட்டு ஊழல் ஒழிப்பு ஆணையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
சுமார் 50 மில்லியன் வெள்ளி நிதி தொடர்பான ஊழல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
திரு இஸ்மாயிலின் மூத்த அதிகாரிகள் நடத்துவதாகக் கூறப்படும் இல்லங்களில் ரொக்கம், தங்கக்கட்டிகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து திரு இஸ்மாயில் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
வழக்கில் மேலும் 23 பேர் சாட்சியமளிப்பர் என்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் எதிர்பார்க்கிறது.
திரு இஸ்மாயில் ஊழலுக்காக விசாரிக்கப்படும் மலேசியாவின் மூன்றாவது பிரதமர். ஏற்கனவே 2 முன்னாள் பிரதமர்கள் ஊழல் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆதாரம் : Others