Skip to main content
மலேசியப் பள்ளியில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியப் பள்ளியில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தரையில் தேர்வுத் தாள் விழுந்தது...

அதை எடுக்கச் சொன்ன ஆசிரியரைச் சற்றும் எதிர்பாராத விதமாகத் தாக்கியுள்ளார் மாணவர் ஒருவர்.

சம்பவம் பஹாங் (Pahang) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஜூன் 28ஆம் தேதி நடந்தது.

மாணவி ஒருவரின் தேர்வுத் தாள் கீழே விழுந்ததால் அதை எடுக்கும்படி ஆசிரியர் அருகிலிருந்த மாணவரிடம் கூறினார்.

ஆனால் மாணவர் உதவ மறுத்தார். தேர்வுத் தாளைக் காலால் மிதித்தார்.

அதன் மீது தண்ணீர் ஊற்ற முற்படுவதுபோல பாவனை செய்தார். பின்பு திடீரன்று ஆசிரியரின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார்.

அதைக் கண்ட மற்ற மாணவர்கள் ஓடி வந்து ஆசிரியரைக் காப்பாற்றினர்.

பின்பு மருத்துவச் சிகிச்சை பெற்ற ஆசிரியர் காவல்துறையிடம் சம்பவம் பற்றிப் புகார் தந்தார்.

சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கேட்வோ விளக்கமளிக்கவோ இல்லை இன்று ஆசிரியரின் குடும்பத்தார் குறைகூறினர்.

அதற்குப் பதில் தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பவம் பற்றிப் பள்ளி விசாரிப்பதாகவும் காவல்துறையின் விசாரணையிலும் பள்ளி ஒத்துழைப்பதாகவும் சொன்னார்.

ஆசிரியருக்கு உரிய ஆதரவு அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையின் உதவியுடன் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக ஆசிரியரின் சகோதரர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்