Skip to main content
சிறிய தீவை உலுக்கிய பெரிய வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

சிறிய தீவை உலுக்கிய பெரிய வெடிப்பு

வாசிப்புநேரம் -
சிறிய தீவை உலுக்கிய பெரிய வெடிப்பு

(படம்: Matthew Mirabelli / AFP via Getty Images)

மால்ட்டாவின் (Malta) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு நாட்டை உலுக்கியிருக்கிறது.

அந்நாட்டின் நக்ஸார் (Naxxar) நகரிலிருக்கும் ஆலையில் நேற்று (ஜூன் 1) காலை விபரீதம் நடந்தது.

நல்லவேளையாக விபத்து நடந்தபோது ஊழியர்கள் யாரும் ஆலையில் இல்லை.

ஆலைக்கு அருகிலிருந்த இரு ஆடவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

அவர்களுக்கு வயது 47, 67.

சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆலைக்கு அருகிலிருக்கும் குடியிருப்புப் பேட்டைகளில் சேதங்கள் ஏற்பட்டன. சில வீடுகளின் சன்னல்கள் உடைந்தன.

வெடிப்பு ஏற்பட்டபோது ஆகாயத் தாக்குதல் நடக்கிறது என்று நினைத்ததாக அங்கு வசிப்போர் சிலர் உள்ளூர் ஊடகத்திடம் கூறினர்.

வெடிப்பின் காரணத்தை அறிய விசாரணை நடக்கிறது.

சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவியது. காணொளியில் ஆலை தீப்பந்தாக மாறியது தெரிந்தது. அதைச் சுற்றி புகைமூட்டத்தைக் காண முடிந்தது.

வெடிப்பு குறித்து இணையத்தில் பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

பட்டாசுகள் தயாரிப்பதையும் பயன்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என்று பலர் பதிவிட்டனர்.

பட்டாசுகளின் ஆபத்தை அறியாமல் பலர் தொடர்ந்து அவற்றை வெடிக்கின்றனர்; இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அதன் புழக்கம் குறையும் என்று நம்புவதாகச் சிலர் பகிர்ந்தனர்.
ஆதாரம் : CNN

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்