உலகம் trending
ஷிபுயா சாலையில் தீப்பற்ற வைத்தவர் கைது
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
ஜப்பானின் பிரபல ஷிபுயா (Shibuya) சாலையில் தீப்பற்ற வைத்த ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சம்பவம் நேற்றிரவு நடந்தது.
அதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவுகிறது.
ஆடவர் சாலையில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்ததாகச் சொல்லப்பட்டது.
சுமார் ஒரு சதுர மீட்டருக்குத் தீ பரவியது, போக்குவரத்து தடைப்பட்டது.
தகவல் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
சம்பவ இடத்தில் விட்டுச்செல்லப்பட்ட ஒரு குறிப்பை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சம்பவம் நடந்து 20 நிமிடத்தில் சந்தேக நபர் சரணடைந்தார்.
50 வயது நிரம்பிய அவரிடம் விசாரணை தொடர்கிறது.