உலகம் trending
ரயிலில் மிளகுப்பொடி தெளிப்பான் அடித்த ஆடவர் - மூச்சுத் திணறிய பயணிகள்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
சீனா குவாங்ஸோ (Guangzhou) மெட்ரோ ரயிலில் பயணிகள் மீது மிளகுப்பொடி தெளிப்பானை (pepper spray) அடித்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நடந்தது.
ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
கூட்டத்தில் நின்றிருந்த அந்த ஆடவர் திடீரென மிளகுப் பொடி தெளிப்பானை எடுத்து பயணிகள் மீது கண்மூடித்தனமாக அடிக்கத் தொடங்கினார்.
பதறிய பயணிகள் அங்குமிங்கும் ஓடினர்.
கூட்டத்தில் சிறு பிள்ளைகளும் வயதானவர்களும் இருந்தனர்.
சிலருக்கு மூச்சுத்திணறியது.
இன்னும் பலர் இருமலால் அவதியுற்றனர்.
அந்தச் சம்பவத்தைச் சிலர் கைபேசி கேமராக்களில் பதிவு செய்தனர்.
ஒருவழியாக ஆடவரைச் சிலர் மடக்கிப் பிடித்தனர்.
ரயிலிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
ஆத்திரத்தில் சிலர் அவரைத் தாக்கினர்.
ஆடவர் ரயிலுக்கு வெளியே தரையில் சுருண்டு படுத்துக் கிடப்பதைக் காணொளியில் பார்க்க முடிகிறது.
அவர் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார் என்ற காரணம் தெரியவில்லை.
ஆடவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நடைபெறுகிறது.