Skip to main content
சீனாவில் சுழற்காற்று
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனாவில் சுழற்காற்று - 12ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்தும் உயிர் தப்பிய ஆடவர்

வாசிப்புநேரம் -
சீனாவில் சுழற்காற்று - 12ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்தும் உயிர் தப்பிய ஆடவர்

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவின் ஹுபெய் (Hubei) மாநிலத்தில் சுழற்காற்று வீசியபோது 12ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் தப்பியுள்ளார்.

30 வயது ஆடவர் சாங் (Zhang) ஹுவாங்காங் (Huanggang) நகரிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்.

அந்தப் பகுதியில் மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

அப்போது வீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட சாங் கீழே இருந்த புதருக்குள் விழுந்தார்.

அதே கட்டடத்தில் வசிக்கும் ஓர் உறவினர் சாங் குடும்பத்தினர் பாதுகாப்பாய் இருக்கிறார்களா என்று பார்க்க அவருடைய வீட்டுக்குச் சென்றார்.

அப்போது சாங்கின் மனைவியின் அழுகுரல் கேட்டது; சாங் கீழே விழுந்தது தெரியவந்தது.

அதற்கு முன்பு உதவி கேட்டு சாங்கின் மனைவி கெஞ்சியபோதும் யாரும் கைகொடுக்கவில்லை.

உறவினர் கீழே விரைந்து சென்று சாங்கைக் கண்டுபிடித்தபோது அவர் மயங்கிக் கிடந்தார்.

சாங் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்