Skip to main content
தண்ணீர் கேனில் பெட்ரோல்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

தண்ணீர் கேனில் பெட்ரோல்! - தமிழ்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பிய காணொளி

வாசிப்புநேரம் -
தண்ணீர் கேனில் பெட்ரோல்! - தமிழ்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பிய காணொளி
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பேச்சு இந்தியாவில் பரவலாக அடிபடுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் விழுப்புரத்தில் (Vilupuram) எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஒருவர் தமது மோட்டார்சைக்கிளில் அமர்ந்தபடி கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் தண்ணீர் கேனை வைத்திருப்பது காணொளியில் தெரிகிறது.

ஊழியர் ஒருவர் அதில் பெட்ரோலை நிரப்புகிறார்.

அவரைத் தொடர்ந்து மற்றொருவர் 2 லிட்டர் பிளாஸ்டிக் போத்தலுடன் வரிசையில் நிற்கிறார்.

அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

காணொளியைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பினர்.

"தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்பிக்கொள்வது சட்டப்படி தவறு. இதற்கு அனுமதி அளித்தது யார்?" எனச் சிலர் கேட்டனர்.

பிளாஸ்டிக் போத்தல்களில் பெட்ரோல் நிரப்புவது எளிதில் தீப்பற்றக்கூடியது என்றும் பெரும் விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டனர்.

"இப்படி பெட்ரோலைப் பதுக்குவது அநியாயம்," என்றனர் சிலர்.

"பிரச்சினையாகவே இல்லாத ஒன்று பிரச்சினையாவது இப்படித்தான்," என்றனர் மற்ற சிலர்.

இத்தகைய காணொளிகளால், பதற்றத்தில் மக்கள் பதுக்கும் அபாயம் அதிகரிக்கும் என்று பலரும் கவலை தெரிவித்தனர்.

1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பதுக்குவது மாபெரும் பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்