உலகம் trending
"ஒருபோதும் பாரமில்லை" - மகளை சுமந்துகொண்டே ஓடிய தந்தை
வாசிப்புநேரம் -
படம்: Instagram/wiradihan_bikeisable
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
"அவள் என் குழந்தை..."
"எனக்கு அவள் ஒருபோதும் பாரமில்லை..."
நெடுந்தொலைவு ஓட்டத்தில் மகளைக் கைகளில் சுமந்துக்கொண்டே ஓடிய ஒரு தந்தையின் வார்த்தைகள் இவை.
மலேசியாவில் நடைபெற்ற கோலாலம்பூர் (Kuala Lumpur) Standard Chartered நெடுந்தொலைவு ஓட்டத்தில் அந்தத் தந்தை தமது மகளுடன் கலந்துக்கொண்டார்.
மூளை வளர்ச்சிக் குறைபாடு (Cerebral Palsy) கொண்ட அவரது மகள் டீஹானின் (Dihan) 18ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் ஓட்டத்தில் பங்கேற்றார்.
முகத்தில் புன்னகையுடன், மகளை இரு கரங்களில் அணைத்தபடி ஓட்டத்தை அவர் நிறைவு செய்யும் காணொளி சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
அருகிலிருந்தவர்கள் தந்தை-மகள் இருவரையும் உற்சாகமாக ஆரவாரம் செய்து வரவேற்பதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
இதுபோன்ற ஓட்டப்பந்தயத்தில் இருவரும் பங்கேற்பது இது முதல்முறையல்ல.
"என் மகளுக்கு என்றைக்கும் துணையாக இருந்து, என் வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறேன்," என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பாசத்திற்குப் புதிய இலக்கணத்தை உருவாக்கிய தந்தை-மகள் பந்தம் இணையவாசிகள் பலரையும் மனமுருக வைத்தது.

ஆதாரம் : Others