Skip to main content
பயணப்பெட்டியில் முதலையின் மண்டை ஓடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பயணப்பெட்டியில் முதலையின் மண்டை ஓடு - டெல்லி விமான நிலையத்தில் ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் பயணப்பெட்டிக்குள் முதலையின் மண்டை ஓட்டை வைத்திருந்த கனடிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BBC செய்தி நிறுவனம் அது குறித்துத் தகவல் அளித்தது.

32 வயது ஆடவர் கனடாவுக்குப் போவதற்காக டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனையின்போது அவரது பயணப்பெட்டியில் முதலையின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது.

777 கிராம் எடை கொண்ட அது, முதலைக்குஞ்சுக்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது. அது துணியில் போர்த்தப்பட்டிருந்தது.

ஆடவர் அதைத் தாய்லந்திலிருந்து வாங்கியதாக Times of India நாளேடு தெரிவித்தது.

ஆடவர் கைது செய்யப்பட்டார். முதலையின் மண்டை ஓடு வனவிலங்குத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக BBC தெரிவித்தது.

ஆடவர் முதலையின் மண்டை ஓட்டை வைத்திருந்தது, இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தையும் சுங்கச் சட்டத்தையும் மீறிய செயல் என்று அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்