ஏலத்தில் $6.2 மில்லியனுக்கு எடுத்த வாழைப்பழத்தைச் சாப்பிட்ட ஆடவர்
AFP
This audio is generated by an AI tool.
6.2 மில்லியன் டாலருக்கு (8.3 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) ஒரு வாழைப்பழம்...
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் தொழிலதிபர் ஜஸ்டின் சன் (Justin Sun) அதை ஏலத்தில் வாங்கினார்.
ஒரு வாரத்தில் பழத்தைச் சாப்பிட்டும்விட்டார்...
அவர் தனியாகச் சாப்பிடவில்லை.
செய்தியாளர்கள் பலரை அழைத்து...
ஹாங்காங்கின் சொகுசு ஹோட்டலில் கேமராக்களின் முன்னிலையில் பழத்தைச் சாப்பிட்டார்.
"வாழைப்பழம் நன்றாக இருக்கிறது... மற்ற வாழைப்பழங்களை விடச் சிறப்பாக உள்ளது," என்று செய்தியாளர்களிடம் திரு சன் கூறினார்.
வாழைப்பழம் உண்மையில் ஒரு கலைப்படைப்பு என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்...
வாழைப்பழம் முதன்முதலில் சுவரில் ஒட்டுவில்லையுடன் ஒட்டப்பட்டிருந்தது.
இத்தாலிய கலைஞர் மௌரிஸியோ கட்டலன் (Maurizio Cattelan) "Comedian" எனும் பெயரில் கலைப்படைப்பை உருவாக்கினார்.
2019ஆம் ஆண்டில் அறிமுகமான அது இவ்வாண்டு Sotheby’s நிறுவனத்தின் ஏலத்தில் விடப்பட்டது.
படைப்பு ஒரே படைப்பாக இருந்தாலும்... வாழைப்பழம் பலமுறை மாற்றப்பட்டுள்ளது.