வீட்டில் ஓரிரவு படுத்துக்கொண்ட கரடி

(கோப்புப் படம்: Pixabay)
உண்ண உணவு வேண்டும்......படுப்பதற்கு இடம் வேண்டும்...
ஜப்பானில் பனிகொட்டும் புக்குஷிமா (Fukushima) பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் அவற்றைத் தேடிக்கொண்டது, கரடி ஒன்று!
நேற்று (23 டிசம்பர்) வேலை முடிந்து வீடு திரும்பிய ஆடவர் அழையா விருந்தாளியை எதிர்பார்க்கவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரமான கரடி வீட்டின் பொது அறையில் படுத்துக்கொண்டிருந்தது...
பொது அறையிலுள்ள மேசையில் வெப்பம் கொடுக்கக்கூடிய kotatsu எனும் போர்வை விரிக்கப்பட்டிருந்தது.
போர்வைக்குள் கரடி அதன் தலையைப் புகுத்தியிருந்தது.
வீட்டில் இருந்த உணவு எங்குப் பார்த்தாலும் சிதறிக் கிடந்தது.
60 வயது ஆடவர் உடனடியாக வந்த வழியே திரும்பினார்.
பக்கத்துவீட்டில் தஞ்சம் புகுந்த அவர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
காவல்துறையினர் இன்று வீட்டைச் சுற்றிவளைத்தனர்.
பட்டாசு சத்தத்தைக் கொண்டு கரடியை வீட்டிலிருந்து விரட்ட முற்பட்ட அவர்கள் பின்னர் கரடியைப் பிடித்ததாக Kyodo News ஊடகம் சொன்னது.