உலகம் trending
மனைவியைக் காப்பாற்ற ஆழமான சாக்கடைக்குள் குதித்த ஆடவர்
Unsplash/Mathis Mauprivez
This audio is generated by an AI tool.
சீனாவில் மனைவிக்காகத் தம்முடைய உயிரையே பொருட்படுத்தாத ஆடவர் பாராட்டு மழையில் நனைகிறார்.
ஷான்டோங் (Shandong) வட்டாரத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி தம்பதி புல்வெளியில் நடந்துகொண்டிருந்தனர்.
மனைவி ஈரமான இடத்தில் கால் வழுக்கி அங்கிருந்த சாக்கடைக்குள் விழுந்தார்.
5 மீட்டர் ஆழம் கொண்டது அந்தக் கால்வாய்.
காயமுற்ற மனைவியால் நகரமுடியவில்லை என்று South China Morning Post ஊடகம் கூறியது.
ஆடவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
மனைவி பக்கத்திலேயே இருந்துவிடலாம் என்று எண்ணினார்.
அவர் சற்றும் தயங்காமல் சாக்கடைக்குள் குதித்ததாக South China Morning Post கூறியது.
தம்பதி பின்னர் தீயணைப்பாளர்களைத் தாங்களே கைத்தொலைபேசியில் அழைத்துத் தகவல் தந்தனர்.
அதிகாரிகள் இருவரையும் மீட்க உதவினர்.
இருவருக்கும் கடுமையான காயமில்லை.
சம்பவத்தை அறிந்த இணையவாசிகள் கணவரின் பாசத்தை மெச்சினர்.
"எனக்குக் காதல் மீது மீண்டும் நம்பிக்கை வருகிறது,"
"மனைவி மீது அவ்வளவு பாசமா?"
என்று பலர் பதிவிட்டனர்.