"அணில் என்று நினைத்தேன்" - நண்பர் தவறுதலாகச் சுட்டதில் மாண்ட இளையர்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
அணில் என்று நினைத்து நண்பர் தவறுதலாகச் சுட்டதில் அமெரிக்க இளையர் ஒருவர் மாண்டார்.
அவர் 17 வயது கார்சன் ரயன் (Carson Ryan) என்று SkyNews சொன்னது. அவர் வாஷிங்டனைச் (Washington) சேர்ந்தவர்.
ரயன் தம் நண்பர்களுடன் பிரைட்டன் (Brighton) பகுதிக்கு வேட்டையாடச் சென்றார்.
அவர்களில் ஒருவர் தவறுதலாகச் சுட்டதில் ராயனின் தலையைத் தோட்டா துளைத்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரயன் அங்கே உயிரிழந்தார்.
அவரின் மரணம் சமூகத்தில் பெருந்துயரை ஏற்படுத்தியது.
அவரது நண்பர்களும் ஆதரவாளர்களும் மேற்கொண்ட நிதித்திரட்டு முயற்சியில் 55,000 டாலர் (சுமார் 70,900 வெள்ளி) பெறப்பட்டது.
வேட்டையாடும்போது விபத்துகள் நடப்பது அரிது என்றாலும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
விசாரணை நடந்து வருகிறது.

ஆதாரம் : Others/Hindustan Times