Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அம்மாவின் கல்லறைக்கு அருகே படுத்துக்கொண்ட மகன்

வாசிப்புநேரம் -
அம்மாவைப் பிரிய மனமில்லாமல் கல்லறைக்கு அருகே படுத்துக்கொண்ட ஆடவர் ஒருவர் இணையவாசிகளின் மனங்களை நெகிழ வைத்துள்ளார்.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் பாங்கி வட்டாரத்தைச் சேர்ந்த அஸிம் இவ்வாண்டு ஜூன் மாதம் தமது தாயாரை இழந்ததாக New Straits Times ஊடகம் சொன்னது.

துக்கத்தில் ஆழ்ந்த அவர் அடிக்கடி இடுகாட்டுக்குச் சென்றார்.

சில முறை கையில் தேநீருடன் செல்வார்...சில முறை பாயுடன் சென்றார்...

அவர் கல்லறைக்கு அருகே வெகுநேரம் அமர்ந்திருப்பார்...

சில முறை உறங்குவார்...

அஸிமின் செயலைச் சில நாள்களாகக் கவனித்த சூ அகமது (Su Ahmad) அவரைப் பற்றி Facebook தளத்தில் பதிவுசெய்தார்.

அண்மையில் அஸிமைக் காணவில்லை என்றும் அவர் நல்ல நிலையில் உள்ளாரா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இணையவாசிகள் பலர் அஸிமின் பாசத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தனர்.

"இப்படியொரு மகனை ஈன்ற அம்மா ஒரு பாக்கியசாலி.."

"அவர் கல்லறைக்கு அருகே படுத்திருப்பதைக் காணும்போது மனம் உடைகிறது," என்று பலர் கூறினர்.

அஸிம் TikTokஇல் தமது துக்கத்தை வெளிப்படுத்தும் சில காணொளிகளையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் இணையவாசிகளின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்