பிள்ளைகள்மீது வேண்டுமென்றே காரைச் செலுத்தி மோதியதாகச் சந்தேகம் - ஆடவர் கைது

Jui Press via AFP
பிள்ளைகள் 7 பேரைக் காரைக்கொண்டு வேண்டுமென்றே மோதியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானின் ஒசாக்கா நகரில் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் சம்பவம் நடந்ததாக NHK ஊடகம் சொன்னது.
நடந்ததை அறிந்த ஆசிரியர்கள் சந்தேக நபரைக் காரிலிருந்து இழுத்ததாக அது கூறியது.
தோக்கியோவில் வசிக்கும் 28 வயது ஆடவர் பிள்ளைகளைக் கொல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் காவல்துறையிடம் குற்றத்ததை ஒப்புக்கொண்டதாகவும் NHK கூறியது.
காயமுற்ற பிள்ளைகள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.