புயலுக்கு நடுவிலும் பூனைகளை மீட்ட ஆடவர்
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவின் தென்பகுதியில் கடும்வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
குவாங்சி (Guangxi) மாநிலத்தின் நானிங் (Nanning) நகரில் ஒரு சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
திரு மோ சிங்சியன் (Mo Xingxian) அங்கு விலங்குக் காப்பகம் நடத்தி வந்தார்.
காப்பகத்தில் அவர் வளர்த்து வந்த நாய்களும் பூனைகளும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.
திரு மோ தம் உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்துக்குள் பாய்ந்தார்.
மற்ற சிலரும் அவருக்குக் கைகொடுத்தனர்.
நீர்மட்டம் உயர்ந்து கொண்டே போனது.
பூனைகளை அவர் உயரமான தளங்களிலும் கூரைமீதும் வைத்தார்.
நாய்களை இரண்டு இரண்டாகப் பத்திரமான இடத்துக்கு எடுத்துச் சென்றார்.
அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
காணொளியில் அவர் நாய்களைக் கையால் தூக்கிக் கூடைக்குள் வைப்பது தெரிகிறது. பிறகு மற்றவர்களுடைய உதவியுடன் கூடைகளை வேறோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதும் தெரிகிறது.
இணையவாசிகள் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்தனர்.
இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது வாயில்லாப் பிராணிகள் கைவிடப்படுவதைப் பலர் குறிப்பிட்டனர்.
அவ்வளவு சிரமத்துக்கு நடுவிலும் பிராணிகளை விட்டுவிடாமல் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி கூறினர்.

ஆதாரம் : Others