Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் ஒன்றுசேர்ந்த டாக்சி ஓட்டுநர்

வாசிப்புநேரம் -

சீனாவில் டாக்சி ஓட்டுநர் ஒருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமது குடும்பத்துடன் ஒன்றுசேர்ந்ததாக South China Morning Post செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் குயாங் (Guiyang) பகுதியில் பெங் (Peng) டாக்சி  ஓட்டிக்கொண்டிருந்தபோது அவரை ஒரு பயணி அணுகினார்.

நீண்டகால நண்பர்போல அவர் பெங்கிடம் பேசினார். தம்மை வேறு ஒருவர் எனத் தவறாக எண்ணிப் பேசுகிறார் என்று பெங் நினைத்தார். 

பேசப்பேச அந்தப் பயணி தமது இரட்டைச் சகோதரர் என்பதை அறிந்தார் பெங். 

சென்ற மாதம் (ஜனவரி) 4ஆம் தேதி பெங் தம் சொந்தக் குடும்பத்துடன் இணைந்தார். அவருக்குக் கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது. 

சகோதரரைக் கண்ட பூரிப்புடன் பேசிய பெங் "கண்ணாடியில் என் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது," என்றார்.

30 ஆண்டுகளுக்கு முன் இரட்டைச் சகோதரர்கள் பிறந்ததும் இறந்துவிட்டதாக மருத்துவர் தாயாரிடம் கூறியிருக்கிறார். 

ஆனால் அவர்கள் இரு வேறு குடும்பங்களால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டனர் என்று South China Morning Post செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

பெங் பலமுறை தமது பெற்றோரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். ஆனால் முயற்சி கைகூடவில்லை. 

பெங்கின் கதை சீனா மக்களின் மனத்தைக் கவர்ந்த நிகழ்வாகியுள்ளது. 

ஆதாரம் : South China Morning Post

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்