சன்னல் விளிம்பிலிருந்து விழவிருந்த சிறுவன்...காப்பாற்றிய ஆடவர்

X/mynewshub
சன்னல் விளிம்பிலிருந்து விழவிருந்த சிறுவனைக் காப்பாற்றிய ஆடவர் இணையத்தில் பாராட்டை அள்ளுகிறார்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாமான் புத்ர பர்தானா (Taman Putra Perdana) வட்டாரத்தில் சம்பவம் நடந்தது.
இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில் கட்டடத்தின் நாலாம் மாடிச் சன்னல் விளிம்பில் ஒரு சிறுவன் காணப்படுகிறார்.
கீழ் மாடிகளில் சன்னலுக்கு வெளியே நிறுவப்பட்ட வேலி மீது ஏறி ஆடவர் சிறுவனைக் கைப்பற்றுகிறார்.
அவர் சன்னல்வழியாகச் சிறுவனை மீண்டும் வீட்டில் சேர்க்கிறார்.
சிறுவனுக்குக் காயமில்லை.
ஆடவர் பக்கத்து வீட்டுக்காரர் என்று Sin Chew Daily ஊடகம் சொன்னது.
அவரின் தைரியத்தை இணையவாசிகள் பாராட்டினர்.
ஆடவர் சிலந்தி மனிதனைப் போல் ஏறியதாக அவர்கள் வருணித்தனர்.
சிலரோ சிறுவன் பாதுகாப்பாக இருப்பதை எண்ணி மகிழ்ந்தனர்.
பிள்ளைகள் சன்னலிலிருந்து விழாமல் இருக்கத் தடுப்புகளை அமைப்பது முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.