தென்கொரியாவில் ஓடும் ரயிலில் தீ மூட்டிய ஆடவர் - பயணிகள் பதறி ஓடினர்
வாசிப்புநேரம் -
படம்: envato.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்கொரியத் தலைநகர் சோலில் 67 வயது ஆடவர் ரயிலுக்குள் தீமூட்டினார்.
காலையில் மக்கள் கூட்டம் நிரம்பிய நேரத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாக Hindustan Times செய்தி கூறியது.
ரயிலின் தரையில் அவர் எண்ணெயை ஊற்றித் தீ மூட்டுவதை ஒருவர் காணொளியாக எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அந்தக் காணொளி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் மே மாதம் 28ஆம் தேதி நடந்ததாக Hindustan Times செய்தி குறிப்பிட்டது.
சம்பவத்துக்குப் பொறுப்புடைய ஆடவர் கண்டறியப்பட்டார்.
அவருக்கு என்ன பிரச்சினை?
அண்மையில் அவருக்கு விவாகரத்து நடந்தது.
தமது விவாகரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மக்களின் கவனத்தைக் கவர்வது அவரது நோக்கம் என்று கூறப்படுகிறது.
ரயிலில் 160 பேர் இருந்தனர்.
அவர்களில் 6 பேருக்குத் தீக்காயம்.
ஆடவர் மீது கொலைமுயற்சி குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others