தாமதமாக 'chicken rice' வாங்கிய மனைவியை அறைந்த கணவர் கைது

(படம்: CNA/ Xing Yun Hainanese Boneless Chicken Rice Facebook)
மலேசியாவின் கோத்தா வாரிசான் (Kota Warisan) நகரில் இருக்கும் கடைத்தொகுதியில் 'chicken rice' உணவை வாங்கிவிட்டு தாமதமாகக் கிளம்பிய பெண்ணை அவரது கணவர் அறைந்ததாக The Star செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பெண்ணின் கணவர் நேற்று முன்தினம் (1 பிப்ரவரி) கைது செய்யப்பட்டு 3 நாள்கள் தடுப்புக்காவலில் இருப்பதாக மலேசியக் காவல்துறை கூறியது.
சம்பவம் குறித்து இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் கையில் பிளாஸ்டிக் பைகளைப் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணை ஆடவர் அறைந்தது தெரிகிறது.
அதன் பின் தமது மனைவியையும் பிள்ளையையும் ஆடவர் வீட்டுக்கு அனுப்பினார்.
ஆனால் அதன் பிறகு வீட்டைவிட்டுக் கிளம்பிய அவர் திரும்பி வரவில்லை என்று The Star தெரிவித்தது.
கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சி அவர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.