காதலியின் நகையை விற்று அவருக்கே பரிசளித்த ஆடவர்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவில் ஆடவர் ஒருவர் தம் காதலிக்குப் பரிசளிக்க அவரது நகையையே விற்றிருக்கிறார்.
ஆடவர் அவரது காதலி சென்னுக்கு (Chen) இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினார். ஆனால் அவரிடம் பணம் இல்லை.
அவர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னின் தங்க நகைகளைத் திருடி 30,000 யுவான் பணத்திற்கு (சுமார் 5,500 வெள்ளி) விற்றார்.
13,140 யுவான் (சுமார் 2,400 வெள்ளி) விலைக்குப் பூங்கொத்தை வாங்கினார்.
ஆடவர் தம் கடனை அடைக்கவும் அன்றாடச் செலவுக்கும் எஞ்சிய பணத்தைச் செலவிட்டார்.
சென் தங்க நகைகளைக் காணவில்லை என்று கடந்த மாதம் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
யாரும் வீடு புகுந்து திருடிய அறிகுறி இல்லை என்று விசாரணையில் தெரிய வந்தது.
சென்னுக்குப் பரிச்சயமானவர் நகைகளைத் திருடியிருக்கவேண்டும் என்று உறுதியானது.
சென் நகைகளை எங்கு வைத்திருந்தார் என்று அவரது காதலருக்கு மட்டுமே தெரியும் என்ற தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை விசாரித்தனர்.
அவர் தம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்; காவல்துறை விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Others