Skip to main content
பாரந்தூக்கியில் வந்தார்...கழுதையில் சென்றார்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாரந்தூக்கியில் வந்தார்...கழுதையில் சென்றார்...

வாசிப்புநேரம் -
பாரந்தூக்கியில் வந்தார்...கழுதையில் சென்றார்...
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

துருக்கியேவில் ஒரு கொள்ளைச் சம்பவம் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது.

கேய்சரி (Kayseri) நகரில் உள்ள நகைக் கடையில் கொள்ளை நிகழ்ந்தது. 

கண்காணிப்புக் கேமராப் பதிவுகளின்படி சந்தேக நபர் ஒருவர் பார்ந்தூக்கியில் ஏறியவாறு கடைக்குள் நுழைகிறார். பின்னர் கடையில் உள்ள பொருள்களைச் சூறையாடுகிறார்.

150 கிராம் தங்க நகையைக் கொள்ளையடித்ததாக நம்பப்படும் அவர் கழுதையில் ஏறி ஓடுகிறார்.

விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சந்தேக நபரை அதே நாளில் கைதுசெய்ததாக Storyful ஊடகம் சொன்னது.

சந்தேக நபர் மதுபோதையில் இருந்தபோது கழுதையில் ஏறிச் சாலைகளில் திரிந்ததாகத் தெரிகிறது.

பின்னர் நகையைத் திருட எண்ணிய அவர் அதற்காக ஒரு பாரந்தூக்கியைத் திருடியதாகவும் நம்பப்படுகிறது.

சந்தேக நபர் திருடிய நகை கடையிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதாக Storyful கூறியது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்