ஜெர்மனியில் இஸ்ரேலியத் தூதரகத்தைத் தாக்க முயற்சி - ஆடவர் கைது
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AP/Jockel Finck)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜெர்மனியிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தாக்க திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அந்த ஆடவர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.
தலைநகர் பெர்லினுக்கு (Berlin) அருகே உள்ள ஒரு நகரில் அவர் நேற்றுக் (19 அக்டோபர்) கைதானார்.
அவர் விசாரணைக்காக இன்று நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜெர்மானிய ஊடகம் dpaவை மேற்கோள்காட்டி SCMP செய்தி வெளியிட்டது.
பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டு உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த ஆடவரின் திட்டம் அம்பலமானதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Others